வேத சாஸ்திரங்களில், புதன் கிரகம் புத்திசாலித்தனத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. புதன் மேஷ ராசியின் மூன்றாவது மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி ஆவார். புதன் கிரகம், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று முதல் மேஷத்தின் முதல் வீட்டில் அஸ்மதிக்கப்போகிறது.
புதனின் அஸ்தனம் காரணமாக, பூர்வீகவாசிகள் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது, வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரச்னைகள் வரும். புதன் கிரகம், அஸ்மதிக்கும் நிலையில், இந்த நான்கு ராசியினர் ஒரு மாத காலத்திற்கு வீழ்ச்சியை சந்திப்பீர்கள்.அதனால் எதிலும் கவனம் தேவை.அவர்கள் யார் யார் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேஷம் : மேஷத்தில் புதன் அஸ்தமிக்கும் போது, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். உயர் ரத்த அழுத்தம், தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உணவில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம்.
கடகம் : இந்த ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமிப்பது நல்லதல்ல. பல பொன்னான வாய்ப்புகள் அவர்கள் கையை விட்டு நழுவலாம். சிலர் வேலையை இழக்க நேரிடும். உங்கள் இலக்குகளை நீங்கள் சந்திக்க முடியாமல் போகலாம் அல்லது உங்கள் மூத்தவர்கள் உங்கள் மீது கோபப்படக்கூடும், இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சில பாதிப்புகளுக்கு ஆளாகலாம். அமைதியான மனதுடன் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
கன்னி: புதன் அஸ்தமிப்பதால், பணியிடத்தில் சிறப்பாக செயல்பட முடியாது. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். பணியிடத்தில் பணி அழுத்தம் அதிகரிக்கலாம், இதன் காரணமாக வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். சொந்தக்காரர்களுக்கு செலவுகள் கூடும். இந்த காலகட்டத்தில் சம்பாதித்த பணத்தில் இருந்து சேமிப்பது உங்களுக்கு எளிதாக இருக்காது.
தனுசு :புதன் கிரகத்தின் அஸ்தமனத்தால், வரவிருக்கும் நேரம் சவாலானதாக இருக்கும். வியாபாரத்தில் கடும் போட்டி ஏற்படலாம். தொழில் பங்குதாரரின் முழு ஆதரவு கிடைக்காததால் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். உங்கள் வருமானத்துடன் ஒப்பிடுகையில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும், அதைச் சந்திப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படலாம்..