தற்போதைய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஆகி வருகிறது. வெறும் கயிறு மட்டும் அல்லாமல், அத்துடன் கிரிஸ்டல் அல்லது யானை, இதயம், வட்டம். முத்து என சில லாக்கெட்டுகளையும் இணைத்து போடுவார்கள். இது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வந்தாலும் பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்களால் பின்பற்றப்படும் சில விஷயங்களில் ஒன்று.
நமது பாட்டி, தாத்தாக்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து வந்தாலோ, அல்லது விபத்துக்கள் ஏற்பட்டாலோ கருப்பு கயிறு அல்லது தலை முடியினால் உருவாக்கப்பட்ட கயிறை காட்டுவார்கள். ஏனென்றால், அது கண் திருஷ்டியை நீக்கிவிடும் என்பது ஐதீகம். ஜோதிடத்தின்படி, காலில் கருப்பு கயிறு காட்டுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூன்று கிரகங்கள் பலம் பெறும் : ஜோதிடத்தின்படி, காலில் கருப்பு கயிறு காட்டுவதால் சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் பலம் பெறும் என கூறப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்பட இருக்கும் அசுப பலன்கள் நீங்கும். அதுமட்டும் அல்ல, சனியின் பலம் கூடும் எனவும் கூறப்படுகிறது. சனியின் உதயத்தால் ஏற்படும் தாக்கம் குறையும். சனி பகவானின் விசேஷ நாளில், சனியை வழிபட்டு கையில் கருப்பு கயிறு காட்டினால், சனி தோஷம் விலகுவதுடன், கண் திருஷ்டி குறையும். மேலும், ஜோதிடர்களின் கூற்றுப்படி, காலில் கருப்பு நூல் அணிவதன் அம்சம் என்னவென்றால், இந்த எளிய தோற்றமளிக்கும் நூல் எல்லா வகையான எதிர்மறை சக்திகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கிறது.
ராகு மற்றும் கேது பலப்படும் : சனியின் நற்பலன் கிடைப்பது மட்டுமல்லாமல், ராகு, கேது எனும் நிழல் கிரகங்களின் நற்பலனைத் தருவதாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தால், உங்கள் காலில் கருப்பு கயிறு கட்டிக் கொள்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் எந்த எதிரி கிரகத்துடன் இணைந்தாலும் உங்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும். அப்போது, கருப்பு நூல் அணிவது உங்களுக்கு அதுபோன்ற பாதிப்புகள் குறைந்து, நல்ல பலன் தருவதாக இருக்கும்.
கருப்பு கயிறு எப்போது, எப்படி அணிய வேண்டும்? : உங்கள் கால் அல்லது கைகளில் கருப்பு கயிறு கட்ட நினைத்தால் சனிக்கிழமை அதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதே போல, கருப்பு கயிறை சனி பகவான் அல்லது பைரவர் கோவிலுக்கு எடுத்துச் சென்று கட்டலாம் அல்லது அங்கே விற்கும் கயிறை கூட வாங்கி கட்டிக் கொள்ளலாம்.
சனியின் பீஜை மந்திரத்தை 21 முறை கறுப்பு நூல் அணிந்த பிறகு உச்சரிப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. உங்கள் காலில் கருப்பு கயிறை நீங்கள் அணிந்திருந்தால், உங்கள் கை அல்லது கழுத்தில் சிவப்பு அல்லது மஞ்சள் நூலை அணிய வேண்டாம். இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். கருப்பு கயிறு கட்டும் போது அந்த கயிற்றில் 9 முடிச்சுகள் போடப்பட்டிருக்க வேண்டும். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்டுவது நல்லது.