கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் செல்லவும், பாதையில் இருக்கும் தடைகள் நீங்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். அஸ்திவாரத்தை பலமாக்குவதுபோல ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்கான முறையே இந்த ஹோமம். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.
கணபதி ஹோமம் செய்வதினால் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மேலும் திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், செல்வ செழிப்பும் வந்து சேரும். ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும்.