சுத்தமான வெள்ளியால் ஆன வளையல் அணிவதால் உடல்நலக் கோளாறுகள் சரியாகும். இது நமது உடலில் இருக்கும் நீர் மற்றும் கபத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்கும். சாஸ்திரங்களின் படி வெள்ளியானது ஒருவர் வாழ்க்கையில் பெருமையையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு அதனை அழகாகவும் மாற்றும்.
வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும் . முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்.