ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு சிறப்பு உடையது. அதே போல ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகரக்கூடியவை. அந்தவகையில், 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், சூரிய பகவான் மேஷ ராசிக்குள் ஏப்ரல் 14 ஆம் தேதி பெயர்ச்சியுடன் தமிழ் புத்தாண்டு துவங்குகிறது. இதையடுத்து, சூரியனும், சந்திரனும் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளனர். அதே இடத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் ஏப்ரல் 20 வியாழன் அன்று காலை 7.4 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை நீடிக்கும். சூரிய கிரகணத்தின் போது சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசியிலேயே சூரிய கிரகணம் நடக்க உள்ளதால், உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதே சமயம் மன குழப்பமும் உண்டாகலாம். இதனால், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவார்கள். நிதி விஷயங்களில் அதிக கவனம் தேவை. எது சரி, எது தவறு என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்க வேண்டும். எந்த முடிவையும் யோசிக்காமல் செய்ய வேண்டாம்.
ரிஷபம் : ரிஷப ராசிக்கு இந்த சூரிய கிரகணத்தால் வாழ்வில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில் பல பிரச்னைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். நீங்கள் உணர்ச்சி வசத்தால் கோபப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் திட்டமிட்டதை விட செலவு அதிகமாகலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவால், சேமிப்பு குறையும்.
கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் ஆரோக்கிய பாதிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக ஏற்ற இறக்கமான நிலையும், நஷ்டம் ஏறபட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வேலைச்சுமை உள்ளிட்ட சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் மன கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் நிதி நிலை சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் அதிகரிக்கும். எங்கு முதலீடு செய்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. அதனால், முதலீடுகளைத் தவிர்க்கவும். உங்கள் தந்தையுடனான உறவு பாதிக்கப்படலாம். மேலும் குடும்ப உறவில் விரிசல் ஏற்படலாம். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும்.
விருச்சிகம் : விருச்சிக ராசியினருக்கு சூரிய கிரகணத்தால் வாழ்க்கையில் பாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சினைகள் வரிசையாக வரும். குடும்பம் சம்பந்தமாக முடிவுகளை ஆலோசித்து எடுக்கவும். சமூகத்தில் உங்கள் மரியாதை பாதிக்கப்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையலாம்.
மீனம் : மீன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் அசுப விளைவுகளால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நண்பர்களால் ஏமாற்றப்படலாம். உங்கள் தொழிலில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கு ஏற்ப பலன் கிடைக்காததால் விரக்தி ஏற்படலாம் இருக்கும். தொழிலதிபர்களின் வேலையில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.