ஒவ்வொருத்தருக்கும் பலம் மற்றும் பலவீனம் என இரண்டு இருக்கும். அவை நல்லவையாகவும் இருக்கலாம் கெட்டவையாகவும் இருக்கலாம். பலவீனத்திற்கும் ராசிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. பலவீனம் சில சமயத்தில், முன்னேற்றத்திற்கு தடையாக அமையும். 12 ராசிகளுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தவகையில், சந்திராஷ்டமம் அடிப்படையில் பன்னிரண்டு ராசிகளின் பலவீனங்கள் என்ன என்பதை இக்கட்டுரையின் மூலம் காணலாம்.
ரிஷபம் : இவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள் மற்றும் சோம்பேறிகள்.எடுத்த காரியத்தை சட்டென முடிக்காமல் மாத கணக்கில் இழுப்பதால், அவர்கள் பல சிறந்த வாய்ப்புகளை இழப்பார்கள். அதே போல, தற்பெருமை பேசுவதில் சிறந்தவர்கள். தனது திறமைகளை கண்டறியாமல், கால் காசுக்கு கடினமாக உழைப்பவர்கள். காலம் போன கடைசியில், யோசித்து பிரயோஜனம் இல்லை. சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்.
மிதுனம் : மிதுனம் காற்று ராசி. இவர்கள் மிகவும் வேகம் மற்றும் கணிக்க முடியாதவர்கள். இவர்கள் காற்றை போல, ஒரே நேரத்தில் பல வேலையை செய்பவர்கள். இவர்களின் பலவீனம், ஆரோக்கியத்தின் மீது அக்கரை செலுத்தாதது. தனது வருமானத்தை அதிகரிக்க வித்தியாசமாக முறைகளை யோசிப்பார்கள். சில சமயங்களில் இது நல்ல பலனை கொடுக்கும். ஆனால், இவர்கள் மிகவும் சுயநலமானவர்கள். எனவே, மற்றவர்கள் இவர்களை குறைவாகவே நம்புவார்கள்.
கடகம் : இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள். இவர்கள் எதையும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். பழிவாங்கும் குணம் உடையவர்கள் மற்றும் பொறாமை குணம் உள்ளவர்கள். இவர்களுக்கு பணத்தின் மீது அதீத ஈர்ப்பு இருக்கும். அவர் மனதுக்கு யார் நல்லவர் என தோன்றுகிறதோ அவர்களுக்கு மட்டும் முன்வந்து உதவுவார்கள். எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் கஞ்சன் போல் செயல்படுவார்கள்.
கன்னி : மற்றவர்களை இவர்கள் எளிதில் நம்ப மாட்டார்கள். கையில் இருக்கும் பணத்தை அனாவசியமாக செலவு செய்யமாட்டார்கள். மற்றவர்களை விமர்சிப்பதும், கேலி செய்வதும் இவர்களுக்கு பிடித்த விஷயம். ஆனால், இது மற்றவர்களை எரிச்சலூட்டும். யாராவது இவர்களை விமர்சித்தால், அவர்களை விமர்சிக்க துவங்குவார்கள். இவர்களின் பலம் அனைவருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என நினைப்பது.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் பழிவாங்கும் குணமுடையவர்கள். காதலில் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருப்பது தான் இவர்களின் மிகப்பெரிய பலவீனம். இவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள். மற்றவர்களை நம்ப வைப்பதில் பலமுறை தோல்வியடைகிறார்கள். மற்றவர்கள் தனது முடிவுகளை அல்லது செயல்பாட்டைக் குறை கூறினால், அவர்கள் கோபமடைவார்கள். தனது தவறை சரி செய்யாமல், குறை கூறியவரின் தவறுகளை தோண்டி எடுத்து சுட்டிக்காட்டுவார்கள்.
தனுசு : தனுசு ராசிக்காரர்கள் கவனச்சிதறல் உடையவர்கள். பச்சோந்திகளைப் போல, சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் ஆளுமையை மாற்றிக் கொள்வார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய விரும்புகிறார்கள். இது பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உலக விஷயங்களை மறந்து, தங்களின் சொந்த விஷயத்தில் கவனம் செலுத்துபவர்கள்.