முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

vastu tips for money plant : அனைவரின் வீட்டிலும் பரவலாக காணப்படும் செடிகளில் ஒன்று மணி பிளான்ட் (Money Plant). மணி ப்ளாண்டாய் வீட்டில் வைத்தால், அந்த கொடி படர்வதை போல நமது வீட்டில் பணம் செழிக்கும் என்பது ஐதீகம். ஆனால், அதை முறைப்படி வைத்தால் மட்டுமே அதன் பலன்களை பெற முடியும்.

 • 19

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  ஜோதிடத்தின் படி, வீட்டில் மணி பிளான்ட் வளர்த்தால் அந்த செடி படர்வதை போல நமது வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை செழிப்பாகும் என ஐதீகம். ஆனால், மணி பிளான்ட் வைத்தால் மட்டும் பல கஷ்டம் நீங்கிவிடுமா? என்று கேட்டால் இல்லை. வீட்டில் மணி ப்ளாண்டை வாஸ்துபடி வைத்தால் மட்டுமே அதன் பலனை நாம் அனுபவிக்க முடியும். வீட்டில் மணி ப்ளாண்டை எப்படி, எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி காணலாம்.

  MORE
  GALLERIES

 • 29

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  மணி ப்ளாண்ட் வைக்க வேண்டிய திசை : வாஸ்துபடி வீட்டின் தென்-கிழக்கு திசையில் இந்த மணி ப்ளாண்டினை வைப்பது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கி - செல்வ வரவை பெருக்கும் என நம்பப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 39

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  மணி ப்ளாண்ட் தரையை தொடக்கூடாது : வாஸ்துப்படி வீட்டில் வைக்கும் மணி ப்ளாண்ட் ஆனது தரையை தொடும் படி (அ) படரும் படி நீளமாக வளர்க்கக் கூடாது என்பது ஐதீகம். முடிந்தளவுக்கு தரையை தொடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 49

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  கொடியை வாட விடாதீர்கள் : மணி ப்ளாண்டினை சூரிய ஒளி அதிகம் படும் இடத்தில் வைப்பது கூடாது. காரணம் இந்த சூரிய ஒளி செடியை வாடச் செய்வதோடு - வீட்டில் இருக்கும் நபர்களின் மன கஷ்டங்களுக்கும் வழிவகுக்கும்.

  MORE
  GALLERIES

 • 59

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  எங்கு வைக்க வேண்டும் : நிபுணர்கள் கூற்றுப்படி இந்த மணி ப்ளாண்டினை வீட்டிற்கு வெளியே திறந்தவெளியில் வைப்பது கூடாது. இவ்வாறு இந்த செடியை வீட்டிற்கு வெளியே வைப்பது பண கஷ்டத்திற்கு வழிவகுக்கும்.

  MORE
  GALLERIES

 • 69

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  வீட்டின் திசை : உங்கள் வீட்டின் நுழைவாயில் வடக்கு திசையில் இருப்பின், இந்த வாசலுக்கு அருகில் ஒரு மணி ப்ளாண்ட் வைப்பது வீட்டிற்குள் நல்ல ஆற்றல்கள் கொண்டுவர உதவும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதாவது, குடும்பங்களில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.

  MORE
  GALLERIES

 • 79

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  வீட்டில் இருக்கும் மணி ப்ளாண்ட் இலைகளை பழுத்து சிவப்பாக மாறும் அளவிற்கு பராமரிக்காமல் விடுவது - வீட்டில் உள்ள நபர்களின் உடல்நல குறைவை குறிக்கிறது. எனவே, அவ்வப்போது இந்த பழுத்த இலைகளை நீக்கிவிடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 89

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  எந்த அறையில் வைக்க வேண்டும்? : படுக்கையறையில் ஒரு மணி ப்ளாண்ட் வைப்பது, கணவன் - மனைவி இடையே வரும் பிரச்னைகளை தவிர்க்க உதவும். மேலும், இருவருக்கும் இடையேயான நெருக்கத்தையும் அதிகரிக்க இது உதவும்.

  MORE
  GALLERIES

 • 99

  வீட்டில் மணி ப்ளாண்ட் வைத்தும் பணக் கஷ்டமா?... அப்போ இந்த விஷயங்களை கவனிங்க..!

  மற்றவர்களுக்கு கொடுக்கலாமா? : இந்த மணி ப்ளாண்ட்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக நீங்கள் அளிப்பது உங்கள் அதிர்ஷ்டங்களை தாரைவார்த்து தருவதற்கு சமம் ஆகும். எனவே, எக்காரணம் கொண்டும் மணி ப்ளாண்ட்களை மற்றவர்களுக்கு அளிக்க கூடாது.

  MORE
  GALLERIES