ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதம் என்பது நமக்கு தெரியும். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் எந்த கோயில் இருக்கிறதோ இல்லையோ ஏதேனும் ஒரு அம்மன் கோயில் இருக்கும். இந்த கோயிகளில் திருமணம் போன்ற உறவு சார்ந்த சுப காரியங்களைத் தவிர ஏனைய சுப காரியங்கள் தினமும் நடைபெரும். அதிலும் இப்போது கொரோனா காலமாக உள்ளதால் அனைவரும் அவர்களின் ஊர்களில் உள்ள சிரிய கோவிலானாலும் அங்கேயே சுப காரியங்களை முடித்துக்கொள்கின்றனர்.
அதிலும் ஆடி பதினெட்டு நாளான இன்று விவசாயம் செழிக்க மாரியம்மனை வழிபடக்கூடிய அற்புத நாள். ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப இந்த மாதத்தில் விதைத்தால் செழித்து வளரும் என்பதைப் போல, இந்த ஆடி 18ல் வாங்கும் எந்த ஒரு பொருளும் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் பெரும்பாலானோர் இன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க முயற்சிப்பர்.
ஆடிப் பெருக்கு மங்களத்தைப் பெருக்கித் தரக்கூடிய அற்புத நாள். இந்த நாளில் வசதி இருந்தால் அதற்குத் தகுந்தார் போல தங்கம் அல்லது வெள்ளி வாங்கலாம். இல்லையெனில். அதற்கு இணையான மங்களத்தை தரக்க்கூடிய மிக எளிதாக கிடைக்கும் பொருட்களான மஞ்சள், உப்பு வாங்கலாம். மஞ்சள் கிழங்கு வாங்கி ஒரு பாத்திரத்தில் நிரம்பும் படி போட்டு வைக்க வேண்டும். குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் ஸ்வரூபமாகக் கருதப்படுகிறது. மங்களத்தை அருளும் மஞ்சள் தங்கத்திற்கு இணையானது. அதனால் தான் தாலியில் தங்கத்திற்குப் பதிலாக மஞ்சளும் பயன்படுத்தப்படுகிறது.
அப்படியே தாலி தங்கமாக இருந்தாலும் அதில் மஞ்சளும், குங்குமமும் வைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மகாலட்சுமி, குபேரனின் அம்சமாக உப்பு பார்க்கப்படுகிறது. கடைக்கு சென்று புதிதாக கல் உப்பு வாங்கி உங்கள் உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள். இதையும் செய்ய முடியாதவர்கள் இல்லாதவரக்ளுக்கு தானம் வழங்குங்கள். நாம் தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியம், ஆடி பெருக்கில் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.