அதனைத் தொடர்ந்து அதிகாலை வரை நடந்த ஆருத்ரா அபிஷேகத்தில் 33 பழ வகையான அபிஷேகங்கள் நடராஜ பெருமானுக்கு செய்யப்பட்டது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு, 9:00 மணிக்கு, ரத்தின சபாபதிப் பெருமான், கோவில் வளாகம் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் கீழ், ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார்.