முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

தங்கம் அணிவது ஆன்மீக மற்றும் ஆரோக்கிய ரீதியாக பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது. ஆள்காட்டி விரலில் தங்க மோதிரத்தை அணிந்தால் நமது கவனம் அதிகரிக்கும் மற்றும் ராஜயோகத்தை அடைவதற்கான வாய்ப்பை வழங்கும். மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவதால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 • 19

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  ஒரு நாட்டில் இருக்கும் தங்கத்தின் அளவை வைத்து தான், அந்த நாட்டின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. அதுமட்டும் அல்ல, இந்தியாவில் தங்கம் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும், தங்கம் நம் வறுமையைப் போக்கக்கூடியதாகவும், கஷ்ட காலத்தில் நம் பொருளாதார தேவைகளை நிறைவேற்றக்கூடியதாகவும் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி தங்கம் அணிவது எவ்வளவு அதிர்ஷ்டம் என்றும் இது எந்தெந்த ராசிகளுக்கு இது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என பார்க்கலாம். அத்துடன், தங்கத்தை யாரெல்லாம் அணியக்கூடாது எனவும் தெரிந்துகொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 29

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  தங்கத்தின் நன்மைகள் : தங்க உலோகம் அணிவது ஆன்மீக மற்றும் ஆரோக்கிய ரீதியாக பல்வேறு நன்மைகளைக் கொடுக்க வல்லது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஆள்காட்டி விரலில் தங்க மோதிரத்தை அணிவது நம் கவனம் அதிகரிக்கும் மற்றும் ராஜயோகத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும். மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவதால் மகிழ்ச்சியை அளிக்கிறது. சுண்டு விரலில் தங்க நகைகளை அணிய சளி, சுவாச நோய் இருந்தால் நீங்கும்.

  MORE
  GALLERIES

 • 39

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  தங்கள் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் : மேஷ ராசியினர் தங்கம், தங்க மோதிரம் அணிந்தால் மிகவும் சுபத்துவமானதாக இருக்கும். இதனால் உங்களிடம் தைரியமும் வலிமையும் அதிகரிக்கிறது. எல்லா துறைகளிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது. அதோடு அதிர்ஷ்டமும் சாதகமாக இருக்கும். எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில், மனைவியுடன் உறவு வலுப்பெறும். பெற்றோரின் பாசம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களை ஆதரிப்பார்கள். தங்க மோதிரம் அணிவதன் மூலம் பழைய கடன்கள் படிப்படியாக நீங்கி புதிய வருமானம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 49

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்க உலோகம் அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த ராசியினர் கண்டிப்பாக தங்க மோதிரம் அணிய வேண்டும். நெருப்பு ராசியாகவும், சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்கு, தங்கத்தின் காரணியான வியாழன் கிரகத்துடன் நட்புறவைக் கொண்டுள்ளது. எனவே, இந்த ராசியினர் தங்கம் அணிவதால், ஆற்றலும், உற்சாகமும் அதிகரித்து, அனைத்துப் பணிகளையும் எளிதாக முடிக்க முடியும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்ற முடியும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் பலப்படும்.

  MORE
  GALLERIES

 • 59

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  கன்னி : கன்னி ராசியில் பிறந்தவர்கள் தங்க மோதிரத்தை அணிந்தால், அவர்களின் ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். தங்கள் வாழ்க்கையை செழுமையாகும். தங்க மோதிரம் அணிய முடியாவிட்டால், செயின் அல்லது வளையல் என அணியலாம். உங்கள் ராசிக்கு வியாழன் ஏழு மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியாக இருப்பதால் தங்க ஆபரணங்களை அணிவதன் மூலம் சுப பலன்களை பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகள் முடிவடையும்.

  MORE
  GALLERIES

 • 69

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  தனுசு : குரு அதிபதியாக இருக்கக்கூடிய தனுசு ராசிக்கு தங்க மோதிரம் அணிவதால் சுபத்துவமான பலன்களைப் பெற்றிட முடியும். செய்யக்கூடிய வேலைகள் விரைவில் முடியும் பலன் விரைவாக கிடைக்கும். தங்க உலோகத்தின் காரணியாக குரு கருதப்படுவதால், தங்க ஆபரணங்கள் அணிவதால், வியாழன் கிரகம் வலுவடைகிறது. அதன் சுப பலன் காரணமாக பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி, நிதி நிலை மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 79

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  யாரெல்லாம் தங்கம் அணியக்கூடாது? : ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசியினர் தங்க ஆபரணங்கள் அணிவது நல்லதல்ல. அதேபோல், துலாம் மற்றும் மகரம் குறைந்த அளவிலான தங்கத்தை அணிய வேண்டும். நீங்கள் இரும்பு அல்லது நிலக்கரி சார்ந்த தொழில் அல்லது வேலை செய்பவராக இருந்தால், தங்க ஆபரணங்களை அணிய வேண்டாம். ஏனெனில், இவை சனி தேவருடன் தொடர்புடையது. எனவே, தங்க உலோகத்தை அணிவது உங்கள் வணிகத்திற்குப் பாதகத்தை விளைவிக்கும்.

  MORE
  GALLERIES

 • 89

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  கர்ப்பிணிகள் மற்றும் வயதான பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது. அதே சமயம் தூங்கும் போது தங்க ஆபரணங்களைத் தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. தலையணைக்குக் கீழே வைத்துக் கொள்ளக்கூடாது. தங்கத்தை எங்கு வைத்தாலும் சிவப்பு துணியில் கட்டி வைத்தால் பெருகும் என்பது நம்பிக்கை.

  MORE
  GALLERIES

 • 99

  தங்க மோதிரம் அணிவதால் அதிர்ஷ்டம் ஏற்படுமா? - யார் தங்கம் அணியலாம்?

  எப்போதும் வலது கை விரல்களில் தங்கத்தை அணிய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தங்க மோதிரத்தை இடது கையில் அணிய வேண்டாம். மேலும், இடுப்பு முதல் கால் வரை எந்தப் பகுதியிலும் தங்கத்தை அணியக்கூடாது. அவ்வாறு செய்வதால் பல நோய்கள் வரும். தங்கம் அணியும் போது மது அல்லது அசைவம் சாப்பிட வேண்டாம். ஏனென்றால், தங்கம் குரு பகவானுடன் தொடர்புடையது. எனவே, தங்கம், தங்க நகைகளைப் புனிதமாக வைத்திருங்கள். உங்களின் வாழ்க்கை செழிக்கும்.

  MORE
  GALLERIES