சமூகத்தில் அனைத்து விஷயங்களுக்குமே விதிகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. அதனைப் பின்பற்றினால் மட்டுமே அனைவரும் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் சில கிளர்ச்சியாளர்கள் எந்த விதமான ரூல்ஸையும் பின்பற்றாமல், தனக்கு சரி எனப்பட்டதை செய்வார்கள். இந்த வகையானவர்கள் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள், தங்களுக்கு தோன்றுவதை மட்டுமே செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை, விதிகள் என்பது மதிப்பு இல்லாத ஒன்று. இந்த நபர்கள் மிகவும் தன்னிச்சையான மற்றும் உற்சாகமானவர்கள். அவர்கள் ரூல் புத்தகத்தை கடந்து யோசிக்க கூடியவர்கள். எந்த விதமான விதிகளுக்குள் கட்டுப்படாமல், தனக்கான பாதையை வகுத்துக் கொள்வார்கள்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆளுமை மிக்க நபர்களாக இருப்பார்கள். மனக்கிளர்ச்சி மிக்கவர்கள் மற்றும் அடுத்தவர்கள் தான் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பியதை மட்டுமே செய்வார்கள். இதயம் சொல்வதை மட்டுமே கேட்பார்கள். தவறு செய்யும் போது கூட சிந்திக்க மாட்டார்கள்.
தனுசு: ரூல் புக்கில் இல்லாத விஷயங்களைச் செய்வதன் மகிழ்ச்சியையும், சாகசத்தையும் இவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் விதிகளை மீறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எல்லாரும் செல்லும் ஒரே பாதையை இவர்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். தனக்கென தனி பாதை அமைத்து, ‘என் வழி தனி வழி’ என இருப்பது தான் தனுசு ராசிக்காரர்களின் பழக்கம். இவர்கள் பைத்தியக்காரத்தனமான பாதையை முன்னோக்கி எடுப்பது உறுதி.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் உள்முக சிந்தனை கொண்டவர்களாக இருந்தாலும், புரட்சிகரமான செயல்கள் மற்றும் யோசனைகளை நம்புகிறார்கள். இவர்கள் காரணத்தை வலுவாக நம்பும் போது விதியை மீறுவார்கள். அரசியல் மற்றும் பொருளாதார எழுச்சிகளை நோக்கி ஈர்க்க முனைகிறார்கள். தனக்காக நிற்க முடியாதவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
மீனம்: மீன ராசிக்கரார்கள் தங்களது செயல்களால் ஏற்பட போகும் எதிர்வினைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, அவர்களுடைய திருப்தியை மட்டுமே நோக்கமாக கொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதுமே தங்களது உள்ளுணர்வை பின்பற்றுவார்கள், விதிகளை பின்பற்றமாட்டார்கள். இவர்கள் மனக்கிளர்ச்சியுடன் இருந்தாலும், எல்லா குறும்புகளுக்கு மத்தியிலும் சில நேரங்களில் மிகவும் பயப்படவும் செய்கிறார்கள்.