ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதாக இருக்காது.! யார் அவர்கள் தெரியுமா?

இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதாக இருக்காது.! யார் அவர்கள் தெரியுமா?

Rasi Palan: பொதுவாக காதல் முறிவு ஏற்பட்டால் அதை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து விட முடியாது.

 • 16

  இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதாக இருக்காது.! யார் அவர்கள் தெரியுமா?

  பொதுவாக காதல் முறிவு ஏற்பட்டால் அதை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து விட முடியாது. சிலருக்கு காதல் முறிவை கடந்து வர மிக சில மாதங்களே எடுத்து கொள்ளும். ஆனால், சிலருக்கோ காதல் முறிவை கடக்க வருட கணக்கில் கூட ஆகலாம். இது போன்று ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு நபர் அதிக அளவில் உணர்வு பூர்வமாக காதலில் இருந்தால் இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏற்பட கூடும். அதே போன்று சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு தனது முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது. இந்த வகையில் 5 ராசிக்காரர்கள் அடங்குவார்கள். அவர்களை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 26

  இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதாக இருக்காது.! யார் அவர்கள் தெரியுமா?

  மேஷம்: இந்த ராசிக்காரர்கள் செய்ய விரும்புவதெல்லாம், தனது முன்னாள் துணையின் நல்ல நினைவுகளை தனது இதயங்களில் அப்படியே வைத்திருப்பது தான். இவர்கள் தனது முன்னாள் துணையை மறக்க முடியாததற்கு இதுவே காரணமாகும். அதே போன்று கடந்த காலத்தைப் பற்றி நினைத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை இவர்கள் வைத்திருப்பார்கள். மேலும் தனது முன்னாள் துணையுடன் செலவழித்த அனைத்து நினைவுகளையும் அசைபோட்டு கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை அடிக்கடி நினைத்து கொண்டே இருப்பதால் முன்னாள் துணையை மறக்காமல் முடியாமல் தவிப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 36

  இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதாக இருக்காது.! யார் அவர்கள் தெரியுமா?

  ரிஷபம்: தனது காதல் துணையின் பிரிவை ஏற்க விரும்பாமல் அதில் மிகவும் பிடிவாதம் உள்ளவர்களாக இந்த ரிஷப ராசிக்காரர்கள் இருப்பார்கள். தங்கள் அன்பை பிறர் மீது வைத்து விட்டால், அவர்களை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். அதே போன்று தன்னை விட்டு பிரிந்த பிறகும் இவர்கள் தனது முன்னாள் காதல் துணையை பற்றி நினைப்பதை நிறுத்த மாட்டார்கள். மேலும் அவர்களை மறக்க முடியவில்லை என்பதற்காக தன்னை தானே காயப்படுத்தி கொள்வார்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதாக இருக்காது.! யார் அவர்கள் தெரியுமா?

  மிதுனம்: தனது முன்னாள் துணையை மறக்க பலவித நண்பர்களுடன் பழக இந்த ராசிக்கார்கள் முயற்சி செய்வார்கள். இருப்பினும் தன் முன்னாள் துணையின் நினைவுகளை அவர்களால் மறக்க முடியாது. மிதுன ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் வாழ்க்கையை மறந்துவிட்டு முன்னேறுவது கடினமான ஒன்றாக தோன்றும். அவர்களுடன் முன் காலத்தில் அதிகம் சுற்றித் திரிந்ததால், அவரை அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. எனவே துக்கத்தை தணிக்க குடிப்பழக்கத்தை நோக்கி இந்த ராசிக்காரர்கள் திரும்புவதற்கு வாய்ப்புண்டு.

  MORE
  GALLERIES

 • 56

  இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதாக இருக்காது.! யார் அவர்கள் தெரியுமா?

  சிம்மம்: பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுவார்கள். இருப்பினும் தன்னை விட்டு தனது காதல் துணை தன்னை விட்டு பிரிந்து செல்லும் போது அதிக சோகமாகவும் விரக்தியாகவும் இருப்பார்கள். தன்னுடன் உறவில் இருந்தவரை மறப்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தனது முன்னாள் காதல் துணையின் பிரிவை தடுக்க அவர்கள் முயற்சி செய்த விஷயங்களை நினைத்து அழுது புலம்பும் தன்மையுள்ளவராக இருப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்கள் முன்னாள் காதலை கடந்து வருவது அவ்வளவு எளிதாக இருக்காது.! யார் அவர்கள் தெரியுமா?

  விருச்சிகம்: இந்த ராசிக்காரர்கள் காதல் உறவில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, இவர்கள் ஒருவரிடம் உறுதியளிக்கும்போது, தனது வாழ்நாள் முழுவதும் தங்கள் துணையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை இது சரியாக நடக்கவில்லை என்றால், விருச்சிக ராசிக்காரர்கள் மனதளவில் மிகவும் வருத்தப்படுவார்கள். மேலும் ஏமாற்றத்தின் உச்சத்தை இவர்கள் அடைவதுண்டு. பெரும்பாலும் இவர்கள் அறையில் தனியாக அழுவதை பார்க்க முடியும்.

  MORE
  GALLERIES