ஏவுகணை நாயகரான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் இந்திய விண்வெளித்துறைக்கு மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். மக்களின் குடியரசுத் தலைவர் என அழைக்கப்பட்ட அவர், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். குடியரசுத் தலைவர் பொறுப்புக்குப் பின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எழுச்சியுரை ஆற்றி வந்தார். 2015 ஆம் ஆண்டு ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் மாணவர்களிடையே உரையாடிக் கொண்டிருந்தபோது, ஜூலை 27ஆம் தேதியான இதே நாளில் காலமானார்.
1. விண்வெளித்துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவுக்கு ஒரு கனவாகவே இருந்த நிலையில், அந்த குறையைப்போக்குவதில் முழு கவனத்தையும் செலுத்தினார் கலாம். எஸ்.எல்.வி (SLV) உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய அவர், அதன்மூலம் முதன் முதலாக ரோகிணி செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தார். இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியாவும் முதன்முதலாக விண்வெளித்துறையில் காலடி எடுத்து வைத்து வரலாறு படைத்தது.
6. 1998-ல் இதயம் சம்பந்தமான டாக்டர். சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவில் கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் 'கலாம்-ராஜூ ஸ்டென்ட்' என பெயரிடப்பட்டது. இந்த கருவி உருவாக்கியதற்குபிறகு கரோனரி ஸ்டென்ட் கருவிகள் இறக்குமதி செய்வது ஏறத்தாழ 50 விழுக்காடு குறைந்தது. இந்தக் கருவியின் அப்கிரேடு வெர்சன் தற்போது சந்தையில் உள்ளது.