‘ஓல்ட் இஸ் கோல்ட்..!’ செட்டிநாட்டில் க்ளாசிக் கார் ஷோ - கண்டுகளித்த பொதுமக்கள்
காரைக்குடி அருகே பழமையான கார்களின் அணிவகுப்பு கண்டு ரசித்த வெளிநாட்டினர், செல்பி எடுத்து மகிழ்ந்த பழமை கார் ரசிகர்கள். செய்தியாளர் : முத்துராமலிங்கம் (காரைக்குடி)
மாவட்டம் காரைக்குடி அருகே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாரம்பரிய செட்டிநாடு அரண்மனை பங்களா வாயிலில் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் செட்டிநாடு புராதன (பாரம்பரிய) கார்களின் கண்காட்சி நடைபெற்றது.
2/ 7
சென்னையில் இருந்து நேற்று காலை பயணம் மேற்கொண்ட பாரம்பரிய கார்கள் நேற்று இரவு செட்டிநாடு அரண்மனை பங்களாவுக்கு வந்தடைந்து இன்று கார்கள் அணிவகுத்து காட்சிபடுத்தப்பட்டது.
3/ 7
வெளிநாட்டினர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் காரைக்குடி , திருச்சி , புதுக்கோட்டை , மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பழமையான கார்பிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பழமையான கார்களின் அணிவகுப்பு கண்காட்சியை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
4/ 7
இந்த கார் கண்காட்சியில் மிகப் பழமையான 1886 இல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பென்ஸ் பேட்டன்ட் உள்ள காரின் மாடல் இடம் பெற்றிருந்தது.
5/ 7
சோதனை ஒட்டமாக காரில் சிலர் பயனம் செய்து பயண அனுபவத்தை எண்ணி மகிழ்ந்தனர்.
6/ 7
இதுதவிர ஆஸ்டின் ஏ 30 ,1939எம்ஜி, 1948 பீல்ட் மாஸ்டர்,1951 மாடல் செவர்லெட், 1956 மாடல் பிளைமவுத், 1966 மாடல் வேல்ஸ்வேகன், 1964 மாடல் ஃபியட் சூப்பர் செலக்ட், உள்ளிட்ட 1939 முதல் 1991 வரை உள்ள பாரம்பரிய 17 கார்கள் இடம் பெற்றிருந்தன.
7/ 7
இதேபோல 1974 மாடல் சுசுகி ஆர் பி 90, 1967 மாடல் எம்பி அகஸ்டா உள்ளிட்ட 5 பழமையான டூவீலர் வாகன மாடல்களும் இடம்பெற்றிருந்தது . மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்செயலாளர் எம்.எஸ். குகன், தலைவர் பால்ராஜ் வாசுதேவன் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தனர்.