மாவட்டம் திருப்பாச்சேத்தி வைகை ஆற்றங்கரையில் உள்ளது திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய்.
2/ 9
இந்த கண்மாயில் பாதை அமைப்பதற்காக மண் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் அப்போது அங்கு உறைக்கிணறு தென்பட்டது.
3/ 9
அதை பார்த்தவுடன் அவர்கள் அங்கு உள்ள சமூக ஆர்வலர்களிடம் இதுபற்றி கூறினர்.
4/ 9
அவர்கள் வந்து அதை தோண்டி பார்த்தனர். அப்போது 3 அடுக்குகளில் சுட்ட மண்ணால் ஆன உறைக்கிணறு தென்பட்டது.
5/ 9
உடனே சமூக அலுவலர்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
6/ 9
அவர் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
7/ 9
மேலும் சமூக ஆர்வலர்கள் வைகை ஆற்றல் கரையோரம் இன்னும் பழமையான பொருள்கள் பல இடங்களில் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினர்.
8/ 9
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, அகரம், குந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 8 கட்டம் வரை அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்துள்ளது.
9/ 9
எனவே, இந்த பகுதியில் அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கினால் மற்றுமொரு கீழடிபோல் உருவாகலாம் என கூறப்படுகிறது.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, அகரம், குந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 8 கட்டம் வரை அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்துள்ளது.