

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. (ICC)


3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோற்றது. (ICC)


11 டி-20 தொடர்களில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி சாதனை படைத்த பாகிஸ்தான் அணி, தென்னாப்ரிக்காவிடம் பரிதாபமாக தோற்றது. (ICC)


முன்னதாக, தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியின்போது பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. (CricketSA)


இதனால், வரும் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது செயல்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. AFP)


இந்நிலையில், சர்பராஸ் அகமதுதான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.


இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இசான் மனி கூறுகையில், “சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர் என்பதை சர்பராஸ் அகமது நிரூபித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அவர் தலைமையில்தான் பாகிஸ்தான் அணி வென்றது. ஐசிசி டி-20 தரவரிசையிலும் பாகிஸ்தான் முதல் இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கும், உலகக்கோப்பை தொடருக்கும் பாகிஸ்தான் அணிக்கு அவர்தான் கேப்டனாக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தார். (AP)