சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான மாணவர்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.
2/ 6
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
3/ 6
இதில் பள்ளி மாணவர்கள் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளை நடனமாடி அசத்தினர்.
4/ 6
தொடர்ந்து பழங்காலங்களை நினைவு கூறும் வகையில் பள்ளியின் ஆசிரியர்கள் பாரம்பரிய புடவை அணிந்து நெல் குத்தி ஆட்டுக்கல் அம்மி கல்லில் அரிசியை அரைத்து பழங்காலங்களை நினைவு கூர்ந்தனர்.
5/ 6
தொடர்ந்து சிலம்பாட்டம் பானை உடைக்கும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
6/ 6
தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மாணவர்களின் கண் கவர் பாரம்பரிய நடன நிகழ்ச்சி காண்பொரை வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.