முகப்பு » புகைப்பட செய்தி » சேலத்தில் கேக் மிக்சிங் திருவிழா.. 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

சேலத்தில் கேக் மிக்சிங் திருவிழா.. 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.

 • 14

  சேலத்தில் கேக் மிக்சிங் திருவிழா.. 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது கேக். அன்புக்குரியவர்களுக்கு பாசத்தை வெளிப்படுத்தவும் நட்புறவை மேம்படுத்தவும் கேக் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பிளம் கேக் தயாரிக்கும் பணி தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் தொடங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  சேலத்தில் கேக் மிக்சிங் திருவிழா.. 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

  அதன் ஒரு பகுதியாக சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது. இதில் கேக் தயாரிக்க 500 கிலோ எடையிலான முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலக்கும் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 34

  சேலத்தில் கேக் மிக்சிங் திருவிழா.. 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

  சமையல் கலை நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மூலப் பொருட்களை கலந்து காற்று புகாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு 45 நாட்களுக்கு பிறகு இந்த கலவையை கொண்டு சுமார் 500 கிலோவுக்கு மேல் பிளம் கேக் தயாரிக்க உள்ளதாக சமையல் கலை நிபுணர்கள் தெரிவித்தனர்.

  MORE
  GALLERIES

 • 44

  சேலத்தில் கேக் மிக்சிங் திருவிழா.. 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்..!

  மேலும் இது குறித்து சமையல் கலை நிபுணர் செப் மோகன் கூறுகையில், “ இந்தப் பிளம் கேக் தயாரிப்பதற்கு உலர் திராட்சை உள்ளிட்ட பழங்களை இயற்கையான முறையில் பதப்படுத்தி அதன்மூலம் பொதுமக்களுக்கு ஆரோக்கியமான பிளம் கேக்கை தயாரித்து வழங்கி வருகிறோம். மேலும் நாங்கள் தயாரிக்கும் கேக்கிற்கு எந்த ஒரு வண்ணமும் சேர்க்கப்படுவதில்லை. பழங்களில் இருந்து கிடைக்கும் வண்ணங்களை கொண்டே கேக் தயாரிக்கிறோம் என்று கூறினார்கள்.

  MORE
  GALLERIES