மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலம் வந்தார். அவர் சேலம் பனமரத்துப்பட்டி அருகில் உள்ள ஜருகுமலை பகுதிக்கு சுமார் 14 கிலோ மீட்டர் நடந்து சென்று அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களை சந்தித்தார். அப்போது பொதுமக்களிடம் மருத்துவம் குறித்தும், மக்களை தேடி மருத்துவம் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். ஒவ்வொரு வீடாகச் சென்று மருத்துவ சேவை கிடைக்கிறதா? இல்லையா? என்றும் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் மலைவாழ் மக்கள் இப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர் . இதனை தொடர்ந்து உடனடியாக ஜருகுமலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.