முகப்பு » புகைப்பட செய்தி » ராமநாதபுரம் » சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

Kamuthi Fort | ராமநாதபுரம் மாவட்டம் கமுதியல் சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட வட்ட வடிவிலான கமுதிக்கோட்டை கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இதற்கான காரணத்தையும், கோட்டையின் சிறப்புகளைப் பற்றியும் பார்ப்போம்.

  • 19

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    ராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சேதுபதி மன்னர்கள் , மற்றும் மாவட்டங்களில் பல கோட்டைகளை கற்கோட்டைகளாக கட்டியுள்ளனர். அந்த வகையில் கிழவன் சேதுபதி மற்றும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆகியோர் காலத்தில் பல்வேறு கோட்டைகள் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    முத்து விஜய ரெகுநாத சேதுபதி காலத்தில் கமுதி, பாம்பன் மற்றும் செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகள் கட்டப்பட்டன. இந்த கோட்டைகள் பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும், அந்த இன்ஜினியரின் பெயர்கள் தெரியவில்லை.

    MORE
    GALLERIES

  • 39

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    கமுதிக்கோட்டை வட்டவடிவிலும், செங்கமடை கோட்டை அறுங்கோண வடிவத்திலும் கட்டப்பட்டுள்ளன. பாம்பன் கோட்டை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட நிலையில், எஞ்சி இருந்த பகுதிகள் 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் அழிந்து போனது. எனவே, இந்த கோட்டையின் வடிவ அமைப்பை நம்மால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

    MORE
    GALLERIES

  • 49

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    கமுதியில் குண்டாற்றுக்கு வடக்கே உயர்ந்த மூன்று சுற்று மதில்களுடன் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் பாறைக்கற்களை அடுக்கி பலப்படத்தியுள்ளனர். இதில் வீரர்கள் நின்று கண்காணிக்கும் வகையில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 59

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    இந்த கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கான செங்கற்களை அந்த பகுதியிலேயே தயாரித்து சுட்டு பயன்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 69

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் 1801ஆம் ஆண்டு இந்த கோட்டையை கைப்பற்றினர். பின்பு அவர்களிடம் இருந்து மருது சகோதரர்கள் இந்த கோட்டையைக் கைப்பற்றினர். ஆயினும் மீண்டும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர் இந்த கோட்டையை கைப்பற்றி இடித்தனர். அவ்வாறு இடித்தது போக எஞ்சியிருக்கும் கோட்டையின் பகுதிகளே இப்போது காட்சியளிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 79

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரம் ததும்ப போராடிய வீரபாண்டி கட்டபொம்மன் 1798ஆம் ஆண்டு,  ஆங்கிலேயரான ஜாக்சன் துரையைச் சந்திக்க ராமநாதபுரம் வந்தபோது இந்த கோட்டையில் தங்கிச் சென்றார். இதனால் இதனை கட்டபொம்மன் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 89

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    வட்டவடிவிலான இந்த கமுதிக் கோட்டையை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிப்படைந்தும், கற்கள் பெயர்ந்தும் வெறும் கூடாக இப்போது காட்சியளிக்கும் இந்த பகுதி கோட்டைமேடு என்றும் அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 99

    சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட கமுதிக்கோட்டை ஏன் கட்டபொம்மன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது... இதன் சிறப்புகள் என்ன?

    வீரமும், வெற்றியும், வலிகளும், தோல்விகளும், ஆரவாரமும் என பலதரப்பட்ட உணர்வுகள் மாறி மாறி ஏற்பட்டு பின்னர் சிதைந்துபோன இந்த கோட்டை வரலாற்று சுவடுகளையும், வீரத்தையும் தாங்கி நிக்கும் கம்பீர கோட்டையாக திகழ்கிறது.

    MORE
    GALLERIES