பாம்பன் - தனுஷ்கோடி பாசஞ்சர் ரயிலை கடல் சுருட்டி இழுத்து கவிழ்த்தது. இதனால், அதில் பயணித்த 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அழிந்து போன வணிக நகரான தனுஷ்கோடி, தற்போது புயலின் எச்சங்களாக நினைவுச் சின்னங்களைப்போல் காட்சியளிக்கிறது. இதை பார்க்கும் சுற்றுலா பயணிகள் அதன் வரலாற்றையும் தெரிந்து கொண்டு திரும்புவது நல்லது.