வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையிலும் மீன்வரத்து அதிகரிப்பாலும் மீன்களை கருவாடாக காயவைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
2/ 17
மழைக்காலம் நெருங்குவதால் அதிகளவில் கருவாடுகளை தேக்கிவைப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
3/ 17
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ஆகிய பகுதிகளில் மீன்பிடி தொழிலே பிரதான தொழிலாக விளங்குகிறது.
4/ 17
61 நாட்கள் கொண்ட மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த மாதம் 15 தேதி முதல் மீன்வர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். எதிர்பார்த்ததை விட அதிகளவில் மீன்வரத்து கிடைத்தது.
5/ 17
விற்பனையான மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டு மீதமான மீன்களை தினந்தோறும் வெயிலில் காய வைத்து கருவாடாக மீன்வர்கள் மாற்றுகின்றனர்.
6/ 17
இதையடுத்து, மீன்களை கருவாடாக மாற்ற மீனின் வயிற்று பகுதியை அறுத்து குடல்பகுதியை வெளியேடுத்து உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து காயவைக்கும் முறையை மீன்வர்கள் பின்பற்றுகின்றனர்.
7/ 17
விலைமீன், திருக்கை, பண்ணா, நெத்திலி, சொன்னாகொன்னி, சீலா, நகரை, வாழை, தொண்டன், பாறை, கட்டா, மாசி, இறால், கணவாய், போன்ற மீன்கள் குளிபாடம் செய்து காயவைத்து கருவாடாக மாற்றுகின்றனர்.
8/ 17
மீன்களை விட கருவாட்டிற்க்கு தான் விலை அதிகம் ஏனென்றால், 200 கிலோ மீன்வாங்கி கருவாடாக்கும் போது 100 கிலோ தான் இருக்கும். இதனால் விலை அதிகம்.
9/ 17
இந்த கருவாடுகளை உண்பதால் நம் உடலில் சப்த தாதுக்கள் உண்டாகும். சட்னி, சாம்பார், வறுவல், பொறியல் கூட்டு வைத்து உண்பார்கள். சில கருவாடுகள் ருசிக்கு ஏற்ப விலை விற்பனையாகிறது.