பாம்பன் புதிய ரயில் பாலம் தூண்கள் அமைக்கப்பட்டு கர்டர்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2/ 9
ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் சாலை பாலமும், பாம்பன் ரயில் பாலமும் தான். 105 ஆண்டுகள் கடந்து பழமை ஆகிவிட்டதால் புதிய பாலம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
3/ 9
பாம்பன் பாக்ஜல சந்தி கடலில் பாம்பன் ரயில் பாலம் கடந்த 1914இல் கட்டப்பட்டு, ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சுமார் 2.06 கிமீ தூரமுள்ள இந்த பாலத்தில் கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக, தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
4/ 9
மீட்டர் கேஜ் ரயில்களுக்காக கட்டப்பட்ட பாம்பன் பாலம், கடந்த 2006 - 2007ஆம் நிதியாண்டில் அகலப்பாதை ரயில் போக்குவரத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.
5/ 9
தற்போதுள்ள ரயில் பாலம் அமைத்து 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் பழைய பாலத்தின் அருகிலேயே ரூ.279.9 கோடி மதிப்பீட்டில் 101 தூண்களைக் கொண்டு கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
6/ 9
புதிய ரயில் பாலத்தில் 101 தூண்களும் 99 கர்டர்களும் அமைக்கப்படுகிறது. இந்த 99 கர்டர்களில் 48 கர்டர்கள், ஒவ்வொரு தூணிற்கும் இடையிலும் 20 அடி இடைவெளி விட்டு அமைக்கப்படுகிறது.
7/ 9
இந்த பாலத்துக்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
8/ 9
இதனிடையே புதிய ரயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு அமைய உள்ள ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலத்திற்கான கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
9/ 9
புதிய ரயில் பாலத்திற்கான கட்டுமான பணிகள் இரவு பகலாக தற்போது தீவிரமாக் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்தாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு புதிய ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.