மதமென பிரிந்ததுபோதும்... இஸ்லாமிய பெண்கள் கொண்டாடிய பொங்கல் விழா.. ராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி
Pongal 2023 : ராமநாதபுரத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடிய முஸ்லீம் பெண்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருவது மன மகிழ்ச்சியாக இருப்பதாக பேட்டி. செய்தியாளர் : வீரக்குமரன் - ராமநாதபுரம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்று சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
2/ 7
இந்நிலையில் ராமநாதபுரம் அம்பலகாரர் தெருவில் பாத்திமா மகளிர் சுய உதவி குழு சார்பில் தலைவி ஆபிதா பானு தலைமையில் 25க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் சமத்துவ பொங்கல் வைத்து தைப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
3/ 7
உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை இந்துக்கள் மட்டும் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
4/ 7
இந்த சூழ்நிலையில் பாத்திமா மகளிர் சுய உதவி குழு சார்பில் தமிழர்களின் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் இஸ்லாமிய பெண்கள் அனைவரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
5/ 7
இதுகுறித்து முஸ்லிம் பெண்கள் கூறுகையில், “இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் சேர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறோம்.
6/ 7
இந்துக்கள் எப்படி காலையிலிருந்து கோலமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்களோ அதேபோல் முஸ்லிம் பெண்களும் அதிகாலையில் எழுந்து எங்களது வீடுகளில் கோலமிட்டோம்.
7/ 7
பொங்கல் வைத்து விட்டு அதன்பின் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாடி வருவது மன மகிழ்ச்சியாக இருப்பதாக” தெரிவித்தனர்.