ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!
Ramanathapuram District | ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இராமலிங்க விலாசம் அரண்மனையின் சிறப்பும், அங்கே வரையப்பட்டுள்ள சுவரோவியங்களின் அழகும், அவை கூறும் கதைகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
பாண்டியர்களுக்கு பிறகு, ராமநாதபுரத்தை ஆண்டவர்கள் சேதுபதி மன்னர்கள். ராமநாதபுரத்தை ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1676க்குப் பின்னர் சேதுபதிகளின் தலைநகராக மாற்றினார். இ பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை ராமநாதபுரத்தில் கட்டப்பட்டது.
2/ 7
இந்த அரண்மனை சுவர்களில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் மன்னர் சேதுபதி குடும்பத்தின் இராஜ வாழ்க்கையை சித்தரிப்பவையாக உள்ளன. இந்த சுவரோவியங்களில் மராத்தியர்களுடன் சமர்புரிந்த போர்க் காட்சிகளும் வரையப்பட்டுள்ளன.
3/ 7
இந்த சுவரோவியங்கள் கலைகளின் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்த பிரமிப்பூட்டும் சுவரோவியங்களும், அவற்றில் காட்டப்பட்டுள்ள ஜீவனுள்ள காட்சிகளும் இந்த சேதுபதி அரசர்களின் காலத்தின் ஓவியக் கலையும், கட்டிடக்கலையும் அதன் மகோன்னதமான நிலையையும் காட்டுகின்றன.
4/ 7
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீது அளவற்ற பக்தி கொண்டதின் வெளிப்பாடக இராமநாதபுரம் அரண்மனைக்கு ராமலிங்க விலாசம் என்றும் பெயரிட்டுள்ளனர்.
5/ 7
இந்த அரண்மனையின் அமைப்பானது கோவிலில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற கட்டமைப்புடன் உள்ளது. இந்த மண்டபம் கட்ட செங்கல், கருங்கல், சுண்ணாபு போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர்.
6/ 7
இந்த ராமலிங்க விலாசத்தின் உள்ளே 16 நீண்ட படிகளை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது, இருபுறம் கல்லால் ஆன யாளிகள் உங்களை வரவேற்கும். மேலும். இந்த மண்டபத்தில் வட்ட வடியில் உயரமான 50 கல் தூண்கள் இருக்கின்றன.
7/ 7
இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் திறந்து இருக்கும். இது சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடமாகும்.