இப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரும், 200 ஆண்டுகளாக விளைவிக்கப்படும் முண்டு மிளகாய் எனப்படும் குண்டு மிளகாய்க்கு தனிச்சிறப்பு இருக்கிறது. வறட்சியை தாங்குவதே இந்த முண்டு மிளகாயின் தனித்தன்மைகளுள் முக்கியமானது. இது கமுதி, கடலாடி, முதுகு ளத்தூா், பரமக்குடி, நயினாா் கோவில், ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.