முகப்பு » புகைப்பட செய்தி » வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

Dhanushkodi Butterfly Migration | உயிரினங்களுக்கு தாங்கள் வாழும் நிலங்களிலுள்ள இருப்பிட சிக்கல், கடுமையான தட்பவெட்ப நிலை, உணவு பற்றாக்குறையை தவிர்க்க தங்கள் தாய் நிலங்களிலிருந்து வாழும் சூழ்நிலை நிறைந்த இடங்களுக்கு சென்று திரும்பி வருவதை ‘வலசை போதல்’ (ஆங்கிலத்தில் Migration) என பறவையியலாளர்கள் அழைக்கின்றனர்.

  • 17

    வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

    இலங்கைக்கு வலசை செல்வதற்காக, உடல் வலிமையை அதிகரிக்க தனுஷ்கோடியில்  குவிந்து வரும் வண்ணத்துப் பூச்சிகள், வாகனங்களில் அடிபட்டு கொத்து கொத்தாக இறக்கின்றன. இதை தவிர்க்கும் வகையில் வண்ணத்துப் பூச்சிகளை காக்க பூங்கா அமைத்து பாதுகாக்க வேண்டுகோள் விடுக்கின்றனர் பறவையிலாளர்கள்.

    MORE
    GALLERIES

  • 27

    வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

    வலசை போதல்:
    உயிரினங்களுக்கு தாங்கள் வாழும் நிலங்களிலுள்ள இருப்பிட சிக்கல், கடுமையான தட்பவெட்ப நிலை, உணவு பற்றாக்குறையை தவிர்க்க தங்கள் தாய் நிலங்களிலிருந்து வாழும் சூழ்நிலை நிறைந்த இடங்களுக்கு சென்று திரும்பி வருவதை ‘வலசை போதல்’ (ஆங்கிலத்தில் Migration) என பறவையியலாளர்கள் அழைக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 37

    வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

    இந்நிலையில், தனுஷ்கோடி கடற்கரையில் மணல் பகுதியில் அதிகளவில் எருக்கன் செடிகள் வளர்ந்துள்ளது. அதில் நூற்றுக்கணக்கான கருஞ்சிவப்பு, வெள்ளை, கருப்பு நிற  வண்ணத்துப் பூச்சிகள் குவிந்துள்ளன. இந்த வண்ணத்துப்பூச்சிகள் அடும்பு மலர், நீலஎருக்கு போன்ற மலர்களில் உள்ள தேன்களை உறிஞ்சி வாழ்கின்றன.

    MORE
    GALLERIES

  • 47

    வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

    இலங்கைக்கு வலசை செல்வதற்காக இந்த வண்ணத்துப்பூச்சிகள் தனுஷ்கோடி பகுதியில் இருந்து  25 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டி உள்ளது. இதனால் 25 கிலோ மீட்டர் தூரத்தினை கடல் கடந்து நிற்காமல் பறந்து கடந்தே செல்ல தேவையான உடல் வலிமை பெறுவதற்கு செடிகளில் வளரும் பூக்களில் அமர்ந்து தேன்களை உறிஞ்சி தேவையான அளவு வலிமை பெற்று பறந்து செல்ல தொடங்குகின்றன.

    MORE
    GALLERIES

  • 57

    வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

    வண்ணத்துப்பூச்சிகளுக்கு பூங்கா அமைக்கப்படுமா?
    இந்தநிலையில் தனுஷ்கோடி பகுதியில் உள்ள எடுக்கன் செடிகளில் நூற்றுக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் குவிந்து வருவது அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிப்பதாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

    தனுஷ்கோடி பகுதிக்கு வரும் வாகனங்களில் வண்ணத்துப்பூச்சிகள் அடிபட்டு சாலை முழுவதும் இறந்த நிலையில் உள்ளது, அதைக் கண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மனவேதனை அடைகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 77

    வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

    இந்நிலையில், வலசைக்காக வரும் வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க வண்ணத்துப்பூச்சிகளுக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

    MORE
    GALLERIES