ஹோம் » போடோகல்லெரி » ராமநாதபுரம் » அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

Ariyaman beach | அரியமான் கடற்கரை ஒருநாள் விடுமுறையைக் கழிக்க ஏற்ற அழகான இடமாகும், இது குடும்பத்தோடு வந்து என்ஜாய் பண்ண ஏற்ற இடம்.

 • 17

  அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

  மாவட்டம் ராமேஸ்வரம் பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் பொழுது போக்காகவும் விரும்பும் இடம், ராமேஸ்வரம் பகுதி மக்கள் அவ்வப்போது சென்றுவரும் கடற்கரையாக இருக்கிறது அரியமான் கடற்கரை.

  MORE
  GALLERIES

 • 27

  அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

  ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கடற்கரை சுமார் 150 மீட்டர் அகலமும், 2 கி.மீ நீளமும் உடைய அழகிய இடமாக இருந்து வருகிறது. அருகில் இருக்கும் சவுக்கு தோப்பு உங்களுக்கு வேற லெவல் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 37

  அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

  இந்த அரியமான் கடற்கரை, ராமநாதபுரம் மட்டும் அல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் வார இறுதி நாட்களை கழிக்க பெருவாரியான மக்கள் வந்து செல்லும் இடமாகவும் திகழ்கிறது. நாள் முழுவதும் அமைதியாக இருக்கக் கூடிய கடலின் அழகை கொண்டுள்ளது இந்த அரியமான் கடற்கரை.

  MORE
  GALLERIES

 • 47

  அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

  இந்த பகுதியில், நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று வீசுவதால், சுற்றுலா பயணிகள் இங்கே வருவதற்கு மிகவும் விரும்புகின்றனர். அருகில் ஆங்காங்கே சிறிய கடைகள் இருக்கின்றன. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்தால் அதை சமைத்துக் கொடுக்கவும் பலர் அங்கே இருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 57

  அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

  இக்கடற்கரையில் குறைந்த உயரத்தில் அலைகள் எழும் என்பதால், பலரும் விரும்பி குளிக்கின்றனர். எனினும் கவனமாகவே குளிப்பது நல்லது. குளித்து விட்டு கடற்கரை மணலில் படுப்பது அலாதியான சுகத்தைக் கொடுக்கும். அப்படியே கடலின் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் அலுக்கவே அலுக்காது.

  MORE
  GALLERIES

 • 67

  அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

  இந்த அரியமான் கடற்ரைக்கு அருகில், குழந்தைகள் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி, செயற்கை இடி மின்னல், நீர்ச்சறுக்கு, செயற்கை அருவி மற்றும் இதர விளையாட்டுகளை விளையாடி களிக்க இங்கே தனியாருக்கு சொந்தமான இடம் இருப்பது சிறுவர்களையும் இங்கே சுண்டி இழுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 77

  அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

  இங்கேயே தங்கி இருந்து இரவு நேர கடற்கரை அழகை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு தனியார் ரெசார்டுகள் இருக்கின்றன. பட்ஜெட்டுக்குள் கண்டு களித்து வர ஒரு நாள் போதுமானது. நாள் முழுவதும் என்ஜாய் பண்ணலாம்.

  MORE
  GALLERIES