முகப்பு » புகைப்பட செய்தி » ராமநாதபுரம் » ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Ramanathapuram | ராமநாதபுரத்தில் பயணிகள் விமான நிலையம் அமைப்பது குறித்து மீண்டும் அறிவிப்பு வந்துள்ளதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • 17

    ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    மாவட்டத்திலுள்ள நாட்டின் புனிதத்தலமாக கருதப்படும் ராமேஸ்வரத்திற்கு, பல்வேறு இடங்களிலிருந்தும் ஆண்டுதோறும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 27

    ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    அது மட்டுமல்லாமல், உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜர் சிலை கொண்ட மங்களநாதர் சிவன் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி, ஆதிஜெகநாத பெருமாள் கோவில், தேவிப்பட்டினம் நவபாஷண நவக்கிரக கோயில், முன்னாள் குடியரத்தலைவர் அப்துல் கலாம் நினைவிடம், தனுஷ்கோடி என ஏராளமான இடங்களுக்கு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். எனவே, ராமநாதபுரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    அவ்வாறு வருபவர்கள் மதுரை மற்றும் திருச்சி வழியாக ரயில் மற்றும் பேருந்து மூலம் சாலை மார்க்கமாக வருகின்றனர். ராமேஸ்வரத்திற்கு விமானம் மூலம் சுற்றுலா வருபவர்கள் மதுரை வரை விமானத்தில் வந்து பின்னர், அங்கிருந்து 170 கி.மீ தொலைவு பயணம் செய்து வரவேண்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 35 கி.மீ தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 20 கி.மீ தூரத்திலும் இருக்கிறது உச்சிப்புளி பருந்து கடற்படை விமானத் தளம். இங்கே இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தி கைவிடப்பட்ட விமானத் தளத்தில், 1982ஆம் ஆண்டு, இந்திய கடற்படை விமானத் தளம் அமைக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 57

    ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    இந்த உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை விமானதளத்தின் ஒரு பகுதியை விரிவாக்கம்செய்து பயணிகள் விமான நிலையம் அமைக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    அவ்வாறு பயணிகள் விமானங்கள் இயக்க வேண்டுமானால், இங்கே 2 கி.மீ நீளத்திற்கும் அதிகமான ஓடுதளம் தேவைப்படும். எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் அவ்வாறான ஓடுதளம் கொண்ட பெரிய விமான தளமாக ஐ.என்.எஸ் பருந்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 77

    ராமநாதபுரத்திற்கு இனி பறந்து செல்லலாம் - சிறப்பு மிக்க உச்சிப்புளி விமானதளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    இதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு 36 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையில், கடற்படை விமான தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்க இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இதனால், சுற்றுலா பயணிகளும் ராமநாதபுரம் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES