ஆண்டுதோறும் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கீழாத்தூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் நெல்லைக் கொட்டி அதன் மீது தென்னம்பாலைகளை வைத்து பூச்சூட்டி ஊர்வலமாக சுமந்து வந்து கோவிலில் கொட்டி வழிபாடு நடத்துவது வழக்கம்.