இதனைத்தொடர்ந்து காயத்திரிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் நபரை எச்சரிக்கும் காட்சியும் இந்த காஞ்சாத்துமலை முருகன் கோவிலிலுக்கு அருகில் உள்ள பாறையில்தான் எடுக்கப்பட்டிருக்கும். சுற்றுலா பயணிகளும், சினிமா ஆர்வலர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் இந்த காஞ்சாத்துமலை. இந்த மலையின் அழகும், இயற்கையும், சில்லென்று வீசும் காற்றும் உங்களை பரவசப்படுத்த காத்துக்கொண்டிருக்கின்றன.