தமிழா்களின் கலை பண்பாட்டினை பாறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன. ஓா் அழகிய குளத்தில் தாமரை மலா்கள், அல்லி மலா்கள், மீன்கள் நீந்துவது போலவும் எருமைகள் நிற்பது போலவும், யானைகள் தண்ணீா் குடிப்பது போலவும், கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் அமைந்த ஓவியங்களும், அரசன் அரசியின் ஒவியங்களும் இங்கே தத்தரூபமாக வரையப்பட்டுள்ளன. இதன் சிறப்பை அறிந்து ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் இங்கே வந்து செல்கின்றனர்.