அதன்படி, தேனீக்களும் அவைகட்டும் தேன் கூடுகளும், தேன்கூடு அமைந்திருக்கும் மலையும் இவ்வூர் மக்களின் வாழ்வோடும் உணர்வோடும் இணைந்து கலந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் இந்த பிறவியில் தேனீக்களாய் பிறந்து, இந்த மலையை கட்டிக் காத்து, முருகனின் அருள் பெற்று சாபவிமோசனம் அடைவார்கள் என்றும் சொல்கின்றனர்.
அதாவது, புதுக்கோட்டை மன்னர் வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றபோது, மன்னருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு வைத்தியம் பார்க்க வைத்தியர் யாரேனும் இருக்கிறார்களா? என்று உடன் வந்த வர்கள் தேடினார். அப்போது அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், இது குறித்து கேட்டபோது, இங்கு வைத்தியர் யாரும் இல்லை ஆனால் மருந்து இருக்கிறது என்று கூறினான்.
பின்னர், அருகில் இருக்கும் தேன் மலையை சுட்டிக்காட்டி, முருகன் அருள்புரியும் அந்த மலையில் இக்கும் சுனை நீரை கொண்டு வந்து மன்னருக்கு கொடுத்தால் வயிற்று வலி நீங்கும் என கூறினான். அவ்வாறே செய்ய மன்னருக்கு வலி நீங்கியது. அதன் பின்னர் மன்னரின் ஆணைப்படி தேனிமலை முருகன் ஆலயம் கட்டப்பட்டது என்று கூறுகின்றனர்.
இந்த தேன் மலையின் அடிவாரத்தில் தேனிப் பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கு படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழியில் இளைப்பாறிச் செல்ல மண்டபங்களும் கடப்பட்டுள்ளன. மேலேவுள்ள கோவிலின் மகாமண்டபத்தில் மயில் வாகனமும், அர்த்த மண்டபத்தில், விநாயகர், சிவன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நந்தி மற்றும் நாகரும் அருள்புரிகினற்னர். கருவறையில் அமர்ந்த கோலத்தில் வள்ள-தெய்வானையுன் சுப்பிரமணிய சுவாமி கருணையின் வடிவாய் காட்சியளிக்கிறார். நோய்கள் நீங்கவும், மனக்குறைகள் விலகவும் இங்கே வழிபடுதல் சிறந்தது என்கின்றனர் பக்தர்கள்.
இந்த தேன் மலையின் உச்சியில் இருந்து கீழே பார்ப்பது அழகாக வியூவைக் கொடுக்கிறது. சில்லென்று வீசும் காற்றும், சுனைகளும், கண்களுக்கு விருந்து படைக்கும் பசுமையும் என பக்தி மட்டும் அல்லாமல் சிறந்த சுற்றுலாவாகவும் இந்த தேனிமலை பயணம் அமையும். இந்த இடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.