இந்த கோவிலில் இருக்கும் கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தைக் சுவற்றில் வீரபத்திரர், சிவன், விஷ்ணு உள்ளிட்டோரின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும், எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன், மகிஷாசுரமத்தினி சிங்கத்தின்மீது அமர்ந்து அரக்கனை வீழ்த்துவது போன்ற காட்சிகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.