லாரியில் சீர்வரிசை கொண்டுவந்து ஊரையே திரும்பிப்பார்க்க வைத்த தாய்மாமன்கள்...
Thai Maman Seer | தாய்மாமன் சீர் என்பது தங்கை மகள் பூப்பெய்திய தாய் வீட்டு சீர்வரிசையாக தாய்மாமன் உறவு வழங்குவது. இது காலகாலமாக இருந்து வரும் தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சாரமாகும்.
யில் ஒரு பெண்ணின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு லாரியில் வந்த தாய்மாமன்களின் சீர்வரிசை, 350 தட்டுகளுடன் வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்த சீர் வரிசையை வியப்புடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
2/ 9
தமிழர்களின் பண்பாடுபடி காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட விழாக்களுக்கு தாய்மாமன்கள் போட்டி போட்டு சீர் எடுத்து வருவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.
3/ 9
அதன்படி புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரத்தை சேர்ந்த சுப.சரவணன் செல்வி இவர்களது மகள் தமிழினிக்கு பூ புனித நீராட்டு விழா இன்று நடைபெற்றது.
4/ 9
இதை முன்னிட்டு நேற்று அவரது தாய்மாமன்கள் டாரஸ் லாரியில் சீர் வரிசையை கொண்டு வந்து அசத்தினர்.
5/ 9
அதில் உடைகள், அலங்கார உபகரணங்கள், பூக்கள், பழங்கள், மாலை, புத்தகங்கள் என 350 தட்டுகளுடன் வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
6/ 9
புதுக்கோட்டை காமராஜபுரத்திலிருந்து விழா நடைபெறும் நிஜாம் காலனியில் உள்ள தனியார் திருமண மண்டபம் வரை சென்ற சீர்வரிசை ஊர்வலத்தை தெரு நெடிகிழும் நின்ற பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
7/ 9
லாரி நிறைய கொண்டுவந்த தாய்மாமன் சீர் வரிசை
8/ 9
ஊரே வியந்து பார்க்க லாரியில் கொண்டுவரப்பட்ட தாய் மாமன் சீர்
9/ 9
சுப.சரவணன் செல்வி இவர்களது மகள் தமிழினி - பூப்பொய்த பெண் குழந்தை.