இதேபோல, பாண்டியநாடு படத்தில் வரும் ‘ஏலே ஏலே மருது’ பாடலில் ‘பாரு பாரு தங்க தேரு தேரு...’ என்ற வரிகள் இடம்பெறும் காட்சியில் ஓர் பாறைக்கு அடியில் விஷால் நிற்பதுபோன்ற காட்சியைப் பார்க்கலாம். அந்த பாறை இந்த திருமயம் கோட்டைக்குள்தான் இருக்கிறது. அந்த பாடலில் குரூப் போட்டோ எடுப்பது போன்ற காட்சி உட்பட பல சீன்கள் இங்கிருக்கும் பீரங்கி மேடை மீது எடுத்திருப்பார்கள்.
சிம்பு நடிப்பில் குத்து படத்தில் பரபரப்பை கிளப்பும் ‘போட்டுத்தாக்கு போட்டுத்தாக்கு’ பாடலில், ‘பாரதத்தில் பத்துகோடி பொண்ணு இருக்கு..’ என்ற பாடல் வரி வரும்போது இந்த திருமயம் கோட்டையில் இருக்கும் பீரங்கி மேட்டை பார்க்கலாம். இதேபோல பல்வேறு திரைப்பட காட்சிகள் இந்த திருமயம் கோட்டையில் எடுக்கப்பட்டுள்ளன.