இந்த கோவிலின் கர்ப்பகிரகத்தில் முருகப்பெருமான் ஆறு தலைகளுடனும், பன்னிரண்டு கைகளுடனும், மயில்மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். முருகனுக்கு தீபம் காட்டும் பொழுது மூன்று முகங்கள் பக்தர்களுக்கு அழகாக்த் தெரிகிறது. பின்புறம் உள்ள கண்ணாடியில் மற்ற மூன்று முகங்களையும் காண முடிகிறது.
மலை மீது உள்ள தூண்களில், நாரதமுனிவர், காஷ்யப்ப முனிவர், அருந்ததி, அருணகிரிநாதர், வசிஷ்டர், ஆறுமுக பெருமான் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. மலையின் அடிவாரத்தில், சரவண பொய்கை இருக்கிறது. இதை நாக தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர். மலைக்கு செல்லும் வழியில், குகை கோவில்களில், இடும்பன் சன்னதி, மீனாட்சி சுந்தரேஸ் வரருக்கு,சந்தன கோட்டம் மண்டபம் போன்றவை காட்சியளிக்கின்றன. மேலும், நவராத்திரி, சண்முக மூர்த்தி மண்டபம் போன்றவையும் இருக்கின்றன.
நாரத முனிவரும், கஷ்யப்ப முனிவரும் இத்தலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு சென்றதாகவும், இதனால், இவர்களுக்கு பாவ விமோசனம் கிடைத்ததாகக் சொல்லப்படுகிறது. வாய்பேச முடியாதவராக இருந்த சிவாசாரியார் என்ற முனிவர், இங்கு வந்து முருகப்பெருமானிடம் வேண்டி வழிபட்டதால், அவர் பேசும் திறமை பெற்றாராம் என்றும், இன்னும் பல அற்புதங்கள் நடந்த தலம் இது என்றும் சொல்லப்படுகிறது.
சரவண பொய்கையில், முருக பெருமான் தோன்றியதாக சொல்லப்படும் சமயத்தில், வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி, முருகனுக்கு உணவு அளிக்க மறந்து போனதாகவும், இதனால் மனைவியை சபித்துவிட, முருகப்பெருமான் வஷிஷ்ட முனிவருக்கு சாபம் கொடுத்ததாகவும், பின்னர் இந்த தலத்திற்கு வந்து முருகனை வேண்டியவுடன், சாப விமோசனம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
இங்கு 6 கால பூஜைகள் செப்படுகின்றன. தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, ஆடி கிருத்திகை போன்றவை இங்கே நடைபெறும் முக்கிய விழாக்களாகும். விராலி மலை முருகனுக்குவள்ளிமயில் காவடி, வினைகள் எல்லாம் தீர்த்து வைக்கும் வேலவனின் காவடி, இன்பம் தரும் காவடி, இன்னல்தீர்க்கும் காவடி என பக்தர்கள் இங்கே காவடி எடுத்து முருகனை வழிபடுகின்றனர்.