முகப்பு » புகைப்பட செய்தி » புதுக்கோட்டை » புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Pudukkottai Narthamalai | வரலாற்று சின்னங்களையும், சிறப்புகளையும் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அற்புதமான சிவன் கோவில் ஒன்று இருக்கிறது.

  • 19

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    மாவட்டம் ஏராளமான வரலாற்று சின்னங்களையும், அளப்பெரிய சிறப்புகளையும் கொண்ட மாவட்டமாக இருந்து வருகிறது. இங்கிருக்கும் குடைவரைக் கோவில்களும், பல நூற்றாண்டுகளாக நீடித்து நிலைத்துவரும் இயற்கை வண்ண சுவரோவியங்களும், அற்புதமான சிற்பங்களும், கோட்டைகளும், பழமைவாய்ந்த கோவில்களும், அகழ்வாராய்சியில் கிடைத்த தெண்மைச் சான்றுகளும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

    MORE
    GALLERIES

  • 29

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    இந்நிலையில், புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது நார்த்தாமலை. இங்கே, மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை மற்றும் பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலைக் குன்றுகள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 39

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    இவற்றுள், இந்த பகுதிக்கு மிக முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது மேலமலை. இங்கேதான் இருக்கிறது சிறப்பு மிக்க விஜயாலய சோழீஸ்வரம் கோவில். மேலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில், உயரத்தில் இருக்கிறது விஜயாலய சோழீஸ்வரம்.

    MORE
    GALLERIES

  • 49

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    இங்கே செல்லும் வழியில் தலையருவி சிங்கம் சுனை ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 15 அடி ஆழத்தில் சிவபெருமானுக்காக வெட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த சுனைக்கு உள்ளே உள்ளே ஜீரஹரேஸ்வரர் என்னும் குடைவரைக் கோவிலில் குடைந்தே வடிக்கப்பட்ட அழகிய லிங்கம் ஒன்று இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 59

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    இந்த லிங்கம் இந்த கோவிலைப் போலவே, பாறையிலேயே குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது.வழவழப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த லிங்கம் சதுர வடிவிலான குடைவரைக் கோவிலுக்குள் சென்று வழிபடலாம். சுமார் 6 அடி கொண்ட அந்த கோலிலை பார்ப்பதற்கு அழகாகவும், வியப்பாகவும் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 69

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    இந்த அரிய குடைவரைக் கோவிலுக்கு செல்ல அந்த சுனையில் பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டும். அருகிலேயே கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு கல்வெட்டில் 1857ஆம் ஆண்டு ராஜா ராமச்சந்திர தொண்டைமான் ராணியால் இந்த சுனை நீர் இறைக்கப்பட்டு சிவலிங்கம் தரிசிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    அந்த சுனை பெரும்பாலும் தண்ணீர் நிறைந்தே காணப்படும் எனவே, அங்கு இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கோவில் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில், இந்த ஆண்டுக்குப் உள்ளூர் மக்கள் ஒன்றுகூடி, சுனையில் நிரம்பி இருந்த நீரை மோட்டார் மூலம் வெளியேற்றிவிட்டு, அங்கே சிவராத்திரி விழாவை எளிமையான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    MORE
    GALLERIES

  • 89

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    இந்த பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு வருபவர்கள் விஜயாலய சோழீஸ்வரம், விஷ்ணு குடவரை, பழியிலி ஈசுவரம் குடவரைக் கோயில் ஆகியவற்றையும் நாம் கண்டு தரிசிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீருக்குள் மூழ்கியிருக்கும் சிவன் கோவில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    மேலும், பல்வேறு சிறப்பு மிக்க சிற்பங்களையும் காணலாம். இந்த பகுதில் இருக்கும் இடங்களை பார்த்து ரசித்து வியக்க ஒரு நாள் போதாது என்றாலும், இந்த பகுதி ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது.

    MORE
    GALLERIES