முகப்பு » புகைப்பட செய்தி » புதுக்கோட்டை » பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

Porpanaikottai Excavation | புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான சங்க காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும், இரும்பை உருக்குவதற்கான உருக்கு கலன்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும்.

 • 110

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  பொற்பனைக்கோட்டை பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல்லாலான கோட்டையாகும். பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள இந்த இடம், புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 210

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  இத்ந கோட்டையானது சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவி்ல் காணப்படுகிறது. இதைத் சுற்றி இடிந்த நிலையில் மதில்சுவர் செங்கற்கள் நிறைந்து காணப்படுகின்றன.கோட்டையைச் சுற்றி நான்கு நுழைவாயில்கள் இருந்ததற்கான தடயங்களும் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 310

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  கோட்டையானது மதில் சுவர்களுக்கு மையத்தில் வட்ட வடிவில் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இதனை அரண்மனைத்திட்டு என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இங்கே கோட்டை கொத்தளம் இருந்ததற்கான சுவடுகளுடன் அகழிகளும் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 410

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  இந்த பகுதியில் மிகவும் பழமையான வண்ணங்களால் ஆன பானை ஓடுகள், களிமண்ணால் செய்யப்பட்ட அணிகலன்கள், வட்டமாகவும், நீளமாகவும் நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண் வார்ப்புக்குழாய்கள் என பல பொருட்கள் கிடைத்ததுள்ளன.

  MORE
  GALLERIES

 • 510

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  இந்த கோட்டை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தைச் சேர்ந்த கோட்டை என்றும்  ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 610

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  எனினும், இந்த கோட்டை 13 ஆம் நூற்றாண்டில் முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது எனறும் பின்னர் 15ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் பெரியளவில் நிர்மாணிக்கப்பட்டு கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 710

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  இங்கே, வியக்கத் தக்கக வகையில், இரும்பை உருக்குவதற்கான, உருக்கு கலன்கள் இருந்ததற்கான தடையங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டது எனவும் இது 2,500 ஆண்கடுளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது

  MORE
  GALLERIES

 • 810

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய இடமாக இது கருதப்படுகிறது. எனவே, இங்கே அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு பலரும் கேரிக்கை விடுத்தனர்.

  MORE
  GALLERIES

 • 910

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  இந்நிலையில், தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மத்திய, மாநில அரசுகள் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

  MORE
  GALLERIES

 • 1010

  பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டு பழமையான இரும்பை உருக்கும் கலன்கள்... இன்றும் பார்க்கக்கூடிய வரலாற்று அதிசயம்!

  இந்நிலையில், பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இங்கே நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல அரிய தகவல்கள் நமக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES