இந்நிலையில் ராசாத்திக்கும், அதே பகுதியில் வசித்த உறவினர் முத்துக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ராசாத்தியின் வீட்டிலேயே அடிக்கடி தனிமையிலும் சந்தித்துள்ளனர். ஆண் நண்பருடன் தாய் தனிமையில் இருப்பதை பார்த்த 17 வயதான மூத்த மகன் வெற்றிவேல் கடந்த 13-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் மரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன், மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார் முத்துக்குமார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து முருகேசன் - ராசாத்தி தம்பதி மற்றும் அவர்களின் உறவினர்கள் பாலாமணி, அன்னபூரணி, சண்முகம், நாகராஜ், சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.