புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. 14 கிராம மக்கள் வெளியேற்றம்...
Puducherry Yanam Flood | புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளில் புகுந்தது. அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போலீசார் உதவி செய்தனர்.
புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா, கோதாவரி ஆற்று பகுதியில் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இருநாட்களாய் கன பெய்து வந்தது.
2/ 9
இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டியுள்ள ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
3/ 9
மழை நின்றாலும் வெள்ளம் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
4/ 9
14 மீனவ கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இங்குள்ள படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
5/ 9
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தநிலையில் மழை நின்றதால் சகஜ வாழ்க்கைக்கு மக்கள் மெல்ல திரும்பி வருகின்றனர்.
6/ 9
பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் வெள்ள நீரில் நடந்தோ அல்லது மிதந்தோ தான் செல்லுகின்றனர்.
7/ 9
டவுலேஸ்வரம், பாலயோகி நகர், குரு கிருஷ்ணாபுரம், ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மாணவர்களை படகுகளில் போலீசார் ஏற்றி பத்திரமான பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
8/ 9
ஏனாம் காவல் கண்காணிப்பாளர் பாலசந்தர் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
9/ 9
அதே நேரத்தில் வருவாய் துறையினர் துணை தாசில்தார் சத்தியநாராயணா தலைமையில் வெள்ள பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன் வெள்ளம் ஊருக்குள் வர க்கூடிய பகுதிளில் மணல் மூட்டைகளை வைத்து தடுப்புகளை அமைத்து வருகின்றனர்.
19