முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி » முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பெயருக்கான அர்த்தத்தை இதில் தெரிந்துகொள்வோம்.

  • 110

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தற்போதைய முதல்வர் என்.ரங்கசாமியால் 2011 பிப்ரவரி 7 ஆம் நாள் தொடங்கப்பட்டது. என்.ரங்கசாமி, இந்தியத் தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறி தனி கட்சியை உருவாக்கினார். அதற்கு அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்று பெயரிட்டார்.

    MORE
    GALLERIES

  • 210

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    என். ரங்கசாமி என்ற அவரின் பெயரைக் குறிக்கும் எழுத்துகள் கட்சியில் பெயராக வைக்கப்பட்டுள்ளதா என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் என்பதற்கு உண்மையான அர்த்தம் ”நமது ராஜ்ஜியம்”. Namathu Rajiyam என்ற வாக்கியத்திற்கு சுருக்கமாகத்தான் N.R என்று குறிப்பிட்டார்.

    MORE
    GALLERIES

  • 310

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    என். ரங்கசாமி, இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது 2001 முதல் 2008 வரை இரண்டு முறை புதுச்சேரியின் முதல்வராக இருந்துள்ளார். பின்னர் 2011 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி, அதற்கு அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்று பெயரிட்டார்.

    MORE
    GALLERIES

  • 410

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    கட்சியைத் தொடங்கிய சில காலங்களிலேயே 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் இணைந்து போட்டியிட்டு, 15 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார். தொடர்ந்து மூன்றாம் முறையாகப் புதுச்சேரி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த முறை அவரின் சொந்த கட்சியில் தலைவராகவும் புதுவையில் முதல்வராகவும் ஆட்சியை அமைத்தார்.

    MORE
    GALLERIES

  • 510

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    புதுவையில் முதல்வராக இருப்பினும் சட்டசபைக்கு இரு சக்கர வாகனத்தில் வருவதை வழக்கமாகக் கொண்டவர். இவரின் எளிமையான தன்மை மட்டுமின்றி இவரின் ஆட்சி முறையை மக்கள் பாராட்டி இவரை ”மக்களின் முதல்வன்” என்று அழைத்தனர்.

    MORE
    GALLERIES

  • 610

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    2016 வரை ஆட்சியில் இருந்த என்.ஆர். காங்கிரஸ், அடுத்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது. திமுக கூட்டணியுடன் தேர்தல் களம் கண்ட காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்தனர். 2016 - 2021 வரை என்.ஆர்.காஸ்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 710

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக ஆதரவுடன் களமிறங்கிய என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தனர். கட்சியின் தலைவரான என்.ரங்கசாமி மீண்டும் நான்காம் முறையாகப் புதுச்சேரியில் முதல்வராகப் பதவி ஏற்றார்.

    MORE
    GALLERIES

  • 810

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    என். ரங்கசாமி தலையிலான எம்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களைப் புதுவையில் அமல்படுத்தியுள்ளார். வீட்டு வசதி திட்டங்கள், கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவருக்கு இலவச கேஸ், பென்ஷன் திட்டங்கள் போன்றவை கொண்டுவரப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 910

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    குறிப்பாக அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் “ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம்” மூலம் காலையில் மாணவர்களுக்குப் பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 1010

    முதலமைச்சர் பெயர்தான் கட்சி பெயரா? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெயருக்கு இதுதான் அர்த்தம்!

    தொடர்ந்து, தற்போது நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கேஸ் சிலண்டரில் விலையில் மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES