முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி » புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Pondichery Rss Rally | தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவ படையுடன் நடத்தப்பட்டது.

 • 16

  புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  தமிழகத்தில்  அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த  அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில்  பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவ படையுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 26

  புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  தமிழகம் முழுவதும் அணிவகுப்பு பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். சார்பில் அனுமதி கோரப்பட்டது. சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களை காட்டி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.

  MORE
  GALLERIES

 • 36

  புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  இந்நிலையில், புதுச்சேரியில் இன்று (அக்.2) இந்த பேரணியை நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்டிருந்தது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஆர்.எஸ்.எஸ். பேரணி புதுச்சேரி பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து மாலை 4 மணிக்கு தொடங்கியது.

  MORE
  GALLERIES

 • 46

  புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் சரவணன், எம்.பி., செல்வகணபதி மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த பேரணி காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்ஸி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக கடலூர் சாலையை அடைந்து அங்குள்ள சிங்காரவேலர் சிலை அருகே மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

  MORE
  GALLERIES

 • 56

  புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  அப்போது பேரணி சென்ற முக்கிய சந்திப்புகளில் பாஜக மகளிரணியினர் மலர் தூவி வரவேற்பளித்தனர். மாலை 4 மணிக்கு துவங்கிய பேரணி மாலை 5 மணிக்கு சுதேசி மில் பொது கூட்டத்தை அடைந்தது.

  MORE
  GALLERIES

 • 66

  புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும்  முக்கிய சந்திப்புகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர். சுதேசி மில் வளாகத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர்கள் நிறுத்தப்பட்டனர்.

  MORE
  GALLERIES