புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2/ 5
புதுச்சேரி மாநிலத்தில் தலைவரின் பிறந்தநாள், நடிகர்களின் பிறந்தநாள்,புதுபடம் வருகை தனியார் நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் சாலையோரங்களில் ஆளுயர பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.
3/ 5
இந்நிலையில் தற்போது கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சாலையோரங்களில் உள்ள பேனர்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
4/ 5
ஆனால் இதுவரை பேனர்கள் ஏதும் அகற்றப்படவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
5/ 5
எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது..