அதே வேளையில் நகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட சாலை உணவகங்களும் சுற்றுலா பயணிகளை வரவேற்க உள்நாட்டு உணவுகள் மட்டுமல்லாது வெளிநாட்டு உணவு வகைகளையும் மக்களுக்கு வழங்க தயாராகி வருகின்றது. குறிப்பாக பட்டேல் சாலை, மிஷன் வீதி, புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, சுப்பையா சாலை ஆகியவற்றில் சிறிய ரக உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் சுட சுட கிடைக்கும் உணவுகளை ரசிக்க பெரும் கூட்டமே இருக்கிறது.
வழக்கமான இட்லி, தோசை மீன் குழம்புடன், நூடுல்ஸ், பிரைய்டு ரைஸ் என்பதையெல்லாம் தாண்டி மலேசியா புகழான நாசி கொரியன் இக்காம் ப்ளீஸ்(NASI GORENG BILIS) நாசி பத்தாயா(NASI PATTAYA) இந்தோனேசியாவை சேர்ந்த மீ கொரியின்(MEE GORENG) மேகி கொரியன்(MEE GORENG), அமெரிக்கன் உணவான கிரிஸ்பி பிராண், கிரிஸ்பி விங்க்ஸ் உட்பட அனைத்து உணவு வகைகளும் இங்கு கிடைக்கிறது. ரசாயன கலப்பில்லாத உணவுகள் இங்கு தயாராவதாக பெருமையுடன் உணவக உரிமையாளர் சதீஷ் தெரிவிக்கின்றனர்.