யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இந்தியாவிலின் 43 இடங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில், அஜந்தா எல்லோரா குகைகள், ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால், ஹம்பி, கஜுராஹோ என பெரிய பட்டில் உள்ளது. அவற்றுள் தமிழ்நாட்டில் மகாபலிபுரம் நினைவுச்சின்னங்கள், தஞ்சை பெரிய கோவில், ஊட்டி மலை ரயில் என இந்த பட்டியல் நீண்டு செல்கிறது.
எனினும் இந்தியாவில் உள்ள அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்கள் உலக பாரம்பரிய நகரங்களாக ஐக்கிய நாடுகள் சபையால் பட்டியலிடப்பட்டுள்ளன.இங்கே பாரம்பரிய கட்டிடங்களைப் பாதுகாப்பது மட்டும் அன்றி, சுற்றுப்புறத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் உரிய உள்கட்டமைப்பு, வெளிச்சம் மற்றும் தெருக் காட்சிகளுக்கு ஏற்ற அடையாளங்கள் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இதேபோல, புதுச்சேரி திட்ட ஆணையமானது இன்டாச் நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய கட்டிடங்களின் இரண்டாவது பட்டியலைத் தயாரித்து வருகிறது, இதில் ஏராளமான தனியார் பாரம்பரிய கட்டிடங்களும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது இதனால் புதுச்சேரி விரைவில் உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.