முகப்பு » புகைப்பட செய்தி » செஸ் ஒலிம்பியாட்டையொட்டி ஆழ்கடலில் செஸ் விளையாடிய நீச்சல் வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட்டையொட்டி ஆழ்கடலில் செஸ் விளையாடிய நீச்சல் வீரர்கள்

  • 16

    செஸ் ஒலிம்பியாட்டையொட்டி ஆழ்கடலில் செஸ் விளையாடிய நீச்சல் வீரர்கள்

    மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக சென்னை நீலாங்கரை அருகே ஆழ் கடலில் செஸ் விளையாடி நீச்சல் வீரர்கள் அசத்தியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 26

    செஸ் ஒலிம்பியாட்டையொட்டி ஆழ்கடலில் செஸ் விளையாடிய நீச்சல் வீரர்கள்

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 36

    செஸ் ஒலிம்பியாட்டையொட்டி ஆழ்கடலில் செஸ் விளையாடிய நீச்சல் வீரர்கள்

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் புதுவிதமாக செஸ் ஒலிம்பியாட்டை பிரபலமடைய செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    செஸ் ஒலிம்பியாட்டையொட்டி ஆழ்கடலில் செஸ் விளையாடிய நீச்சல் வீரர்கள்

    புதுச்சேரி மற்றும் சென்னையில்  temple adventure என்ற பெயரில்  ஆழ்கடல் பயிற்சி பள்ளி நடத்தி  வருபவர் அரவிந்த்.  உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர் . உலக யோகா தினம், காதலர் தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    செஸ் ஒலிம்பியாட்டையொட்டி ஆழ்கடலில் செஸ் விளையாடிய நீச்சல் வீரர்கள்

    அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல்வீரர்கள் செஸ் விளையாடினார்கள்.தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில்  நீச்சல் பயிற்சியாளர் அரவிந்துடன் சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் , செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 66

    செஸ் ஒலிம்பியாட்டையொட்டி ஆழ்கடலில் செஸ் விளையாடிய நீச்சல் வீரர்கள்

    60 ஆடி ஆழத்தில் கடலுக்குள் சென்று செஸ் விளையாடி  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்த நீச்சல் வீரர்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES