முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி » புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

Auroville Festival | நகரம் துவக்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 • 17

  புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

  உலக மக்கள் ஓர் இடத்தில் நாடு, மதம், மொழி, கலாச்சாரம் என வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாழ வேண்டும் என்பது மகான்  ஸ்ரீஅரவிந்தர் கனவு. இதனை நிறைவேற்ற ஆரோவில் என்னும் சர்வதேச நகரை உருவாக்கினார் அவரது முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்படும்  மிர்ரா.

  MORE
  GALLERIES

 • 27

  புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

  புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது சர்வதேச நகரம் ஆரோவில். இது ஐ.நா.வின் யுனெஸ்கோ உதவியுடன்  அமைக்கப்பட்ட பன்னாட்டு கிராமிய நகர சங்கமமாகும்.

  MORE
  GALLERIES

 • 37

  புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

  உலகில், மனித இன ஒற்றுமையின் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன் முதலாக மகான் ஸ்ரீஅரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது. ஆரோவில் குறித்த பொது அறிக்கை 1965ல் வெளியிடப்பட்டது. 1966ல் ஆரோவில் குறித்த திட்டம், 'யுனெஸ்கோ' பொது சபையில் இந்திய அரசால் வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. அரவிந்தர் ஆசிரம அன்னை ஸ்ரீ மீர்ராவின்பெரும் முயற்சியால், 1968, பிப்ரவரி 28ல், ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 47

  புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

  உலகின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவின் 25 மாநிலங்களில் இருந்தும் பிடி மண் கொண்டு வரப்படும் மாத்திர் மந்தீர் (அன்னையின் வீடு) அருகே  கூம்பு உருவாக்கப்பட்டது. நகரம் துவக்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

  இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறி இருக்கும்  மக்கள்  ‘போன் பயர்’ எனப்படும் அலங்கார தீபம் ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக 2020ம் ஆண்டு கொண்டாடப்படவில்லை. கடந்த ஆண்டு விழா இருந்தும் கொரோனா தொற்று காரணமாக பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் 600 க்கும் மேற்பட்ட ஆரோவில்வாசிகள் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்து பங்கேற்றனர்.

  MORE
  GALLERIES

 • 67

  புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

  இந்த ஆண்டு கொரோனா பெரும் அளவில் குறைந்ததால் 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.  55 வது உதய தினமான இன்று  ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்,பொது மக்கள் ஆகியோர் மாத்திர் மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில், அதிகாலை, 5 மணிக்கு கூடினர். 'போன் பயர்' எனப்படும் அலங்கார தீபம் ஏற்றப்பட்டு 6 மணி வரை, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

  MORE
  GALLERIES

 • 77

  புதுச்சேரி ஆரோவில் உதய தினம்... தீபம் ஏற்றி வழிபட்ட ஆரோவில்வாசிகள்!

  தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது. நிகழ்ச்சியின் துவக்கத்திலும் முடிவிலும் ஆரோவில் எதற்காக துவக்கப்பட்டது என அன்னை ஸ்ரீமீர்ரா 1971ம் ஆண்டு இதே நாளில் ஆற்றிய உரை ஒலிபரப்பப்பட்டது. மேலும் மகான் அரவிந்தரின் ஆன்மீக உரையும் வெளியிடப்பட்டது.

  MORE
  GALLERIES