புதுச்சேரி குடியரசு தினத்தையொட்டி வண்ண விளக்கொளியில் மின்னும் அரசு கட்டிடங்கள்
2/ 7
குடியரசு தின விழா 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.இவ்விழாவை சிறப்பாக கொண்டாட அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
3/ 7
கடற்கரை சாலையில் தேசிய கொடியை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஏற்றுகிறார்.சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.
4/ 7
இதனையொட்டி அரசு கட்டிடங்கள் வண்ண விளக்கொளியால் மின்னுகிறது. புதுச்சேரி அரசின் நினைவு சின்னமான ஆயி மண்டபம் வண்ணமயமாகியுள்ளதை சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.
5/ 7
சட்டமன்றம் முழுவதும் வித விதமான விளக்குகளுடன் அலங்கரித்து கண்கவர் காட்சியாக இருக்கிறது
6/ 7
ஆளுநர் மாளிகை சுற்றுசுவர் உட்பகுதியில் வண்ணமயமாக இருக்கிறது.இவ்விரு கட்டிடங்களும் 26-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது
7/ 7
கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலக கட்டிடடம் மின்மயமாகியுள்ளது. தேசிய கொடி மின் விளக்கில் ஒளிகிறது.மேலும் 30,31ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுவதை யொட்டி மின் விளக்கில் "ஜி20 இந்தியா" என ஒளிவதை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்