புதுச்சேரியில் 1962ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது ஒலாந்திரே தொண்டு நிறுவனம். ஏழை எளியோருக்கு கல்வி, இயற்கை விவசாயம், குடிசை தொழில் போன்றவற்றில் உதவி செய்து வருகிறது. பிரெஞ்சு அரசின் உயரிய விருதான செவாலியர் விருதினை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
2/ 7
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக நடைபெறும். அந்த வகையில் துத்திப்பட்டில் உள்ள இந்நிறுவன வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது.
3/ 7
இந்தியாவில் கொரோனா இல்லாத காரணத்தினால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர். இவர்களை ஒலாந்திரே இயக்குனர் செந்தில்குமரன், துணை இயக்குனர் சாந்தி ஆகியோர் வரவேற்றனர்.
4/ 7
வண்ண கோலங்களுக்கு இடையே கரும்பு கொட்டகையில் பொங்கல் பானை வைத்து படையலிட்டு வெளிநாட்டவர் பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.
5/ 7
மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற அவர்கள் உள்ளூர் கலைஞர்கள் நடத்திய கலை விழாவில் கலந்து கொண்டி நடனமாடி மகிழ்ந்தனர்.
6/ 7
இதுகுறித்து வெளிநாட்டவர்கள் கூறுகையில், “தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இவ்விழாவில் 6வது ஆண்டாக பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
7/ 7
பிரான்ஸ் நாட்டில் இருந்து குழுவாக வந்து கொண்டாடுகிறோம்” என தெரிவித்தனர்.